செய்திகள் பிந்திய செய்திகள் பிராதான செய்தி

நான் பேட்மன் லேபிலை பெருமையுடன் அணிவேன் – சஜித்

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் அணியும் பேட்கள் குறித்து உரையாடுவதற்கு நான் வெட்கப்பட மாட்டேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பேட்கள் குறித்து சஜித் பிரேமதாச ஆற்றிய தொடர்பில் அவரை எதிரணியினர் மோசமாக விமர்சித்த நிலையில் பதிலடியாக இந்தக் கருத்தை சஜித் முன்வைத்துள்ளார்.

மேலும்,

யுனிசேப் தகவல்படி இலங்கையில் பாதிக்கும் மேற்பட்ட பருவ வயதுடைய பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் பாடசாலை கல்வியை தவற விடுகின்றனர்.

எமது அரசு சுகாதர பொருட்களுக்கான வரியை 100% இருந்து 63% குறைத்தனர். ஆனால் ஆயிரக் கணக்கான பெண்கள் இன்னமும் களங்கத்தை அனுபவித்து, ஒவ்வொரு மாதமும் தங்களை ஆபத்துக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

இந்த உரையாடலுக்காக நான் வெட்கப்பட மாட்டேன். பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பில் நாங்கள் தீவிரமாக இருந்தால் அதற்குரிய சிறந்த அடிப்படை இடமாக இது இருக்கும்.

நிலையான செலவு குறைந்த வழிகளை கண்டறியும் வரை சுகாதார பொருட்களை இலவசமாக வழங்க வாக்குறுதியளித்து நிக்கிறேன்.

நான் பெண்கள் உரிமைகளில் உறுதியாக இருக்கிறேன். நான் பேட்மன் லேபிலை பெருமையுடன் அணிவேன். எனது பார்வையில் வானுடன் மனிதனாக (மேன்வித்தவனாக) இருப்பது நிச்சயம் விரும்பத்தக்கது. – என்றார்.

Related posts

பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்; தானும் தற்கொலைக்கு முயற்சி

G. Pragas

இரசாயனம் கலந்த மிளகாய் சந்தைப்படுத்தல்

G. Pragas

கடத்தல் வழக்கில் அட்மிரல் ஒப் த ப்லேட் வசந்தவிடம் மீண்டும் விசாரணை!

G. Pragas

Leave a Comment