கட்டுரைகள் செய்திகள்

நாம் தொலைவில் (Public Distancing) இருக்க வேண்டியது அவசியம் ஏன்?

தற்போது உடல் ரீதியாக நாம் தொலைவில் இருக்க வேண்டியது அவசியம்.

அதே நேரத்தில் சமூகத்துடனான தொடர்பில் இருப்பதும் அவசியம்… காரணம் அதுவும் நம் உடல்நலம் சார்ந்தது.

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கிறார்கள். கொரோனா பாதிப்பை முன்கூட்டியே அறியும் வசதியோ அதற்கு மருந்தோ இல்லை என்பது நிதர்சனமான உண்மை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளுவதன் மூலம் நாம் இந்த வைரஸ் தொற்றில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம். மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அதிகம் செல்லக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமூகத்தில் இருந்து சற்று விலகி இருங்கள் என அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். இதனை பலரும் இன்று நமக்கு நெருக்கமானவர்களுக்கு அறிவுறுத்துவது முக்கியமானது.

20200314 social

சமூக தொலைவை கடைபிடியுங்கள் (Social Distancing) என கூறுகிறார்கள். ஒரு நோயின் பரவலை மெதுவாக்க பொது சுகாதார அதிகாரிகள் பரிந்துரைக்கும் ஒரு கருவி மட்டுமே. எளிமையாகச் சொன்னால், மக்கள் ஒருவருக்கொருவர் வெகு தொலைவில் இருக்கிறார்கள் என்பதன் அர்த்தம் அவ்வளவே. இதனால் கொரோனா வைரஸ் போன்ற அல்லது எந்த நோய்க்கிருமியும் – ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவ முடியாது.

vikatan 2020 03 5fa46052 02c1 477b acf9 936b31103a19 17

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையங்கள் சமூக தூரத்தை வெகுஜனக் கூட்டங்களிலிருந்து விலகி 6 அடி அல்லது 2 மீட்டர் தூரத்தை – ஒரு உடல் நீளம் – மற்றவர்களிடமிருந்து விலகி வைத்திருப்பதாக விவரிக்கிறது.
சமூக விலகல் என்பது மற்றவர்களைத் தொடக்கூடாது என்பதுதான். உடல் தொடுதல் என்பது ஒரு நபர் கொரோனா வைரஸைப் பிடிக்கும் வழி மற்றும் அதைப் பரப்புவதற்கான எளிய வழி. நினைவில் கொள்ளுங்கள். அந்த 6-அடி தூரத்தை எப்போதும் நினைவில் கொள்ளுவதுடன் யாரையும் தொடக்கூடாது.

சமூக விலகல் மட்டுமே 100மூ வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என்றால் நிச்சயமாக கிடையாது. ஆனால் இதனைப் பின்பற்றுவதன் மூலம், கொரோனா வைரஸின் பரவலைக் குறைப்பதில் தனிநபர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
தனிமைப்படுத்திக்கொள்கிறேன் எனக்கூறி கொண்டு ஒரு அறையில் அடைந்துக் கொள்வது தேவையில்லாத மன அழுத்ததையும் கொரோனா குறித்த பயத்தையும் தான் கொடுக்கும். உடல் ரீதியிலாக இந்த சமூகத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும்.. ஆனால் உங்கள் மனஓட்டங்கள் இந்த சமூகத்துடன் இணைந்திருக்க வேண்டும்.

உங்களுக்கு தேவையான மருந்து பொருள்கள், காய்கறிகள் போன்றவற்றை பாதுகாப்பான தூரத்தில் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.அதிக கூட்டம் இருக்கும் பகுதிகளுக்கு செல்வதை தவிருங்கள். உடல் ரீதியில் தொலைவில் இருப்பது உங்களது ஆரோக்கியத்துக்கு நல்லது. அதேவேளையில் மனரீதியில் இந்த சமூகத்துடன் இரட்டிப்பு மடங்கு நெருக்கமாக இருங்கள். அது உங்களை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் வைத்தியரகள் கூறுகின்றனர்.

வாட்ஸ் ஆஃப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் உங்கள் உரையாடல்களை தொடரலாம். நண்பர்கள், உறவினர்களுடன் உங்களுடைய உரையாடல்களை தொடருங்கள்.

நாம் இங்கு ஒரு கடினமான சூழலில் இருக்கிறோம். இந்த சூழலில் நமக்கான பொறுப்பும் அதிகம் இருக்கிறது. நாம் உடல்ரீதியிலாக விலகியிருந்தாலும் சமூகப் பொறுப்புடன் இருக்கிறோமா என்று சிந்திக்க வேண்டும். இரக்கம், மனிதாபிமானத்தோடு மற்றவர்களுக்கு உதவ வேண்டும். சமூகத்தில் இருந்து விலகியிருந்தாலும் சமூக அக்கறையோடு இருங்கள்.

வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பு தற்போது பெரும்பாலானோருக்கு கிட்டியுள்ளது. குடும்பத்தினருடன் உரையாடுங்கள். அலுவலக நண்பர்களுடன் தொடர்ந்து வீடியோ கான்பெரன்சிங் மூலம் தொடர்பில் இருங்கள். வீட்டின் அருகே இருப்பவர்களுடன் உரையாடுங்கள் ஆனால் பாதுகாப்பான தூரத்தில் இருந்து உரையாடலை நிகழ்த்துங்கள். அதேநேரம் சமூகத்துடனான உறவை நிறுத்திவிடாதீர்கள்.

Related posts

யாழில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

Bavan

துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்!

G. Pragas

நாடாளுமன்ற தெரிவுக்குழு

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.