செய்திகள் பிரதான செய்தி

நாயை சுட்டுக்கொன்ற முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு மறியல்!

நீர்கொழும்பு – பெரியமுல்லை புனித அந்தோனியார் வீதியில் மனித உரிமை செயற்பாட்டாளரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப அங்கத்தவர் ஒன்றியத்தின் தலைவருமான பிரிட்டோ பெர்னாண்டோவின் நாயை சுட்டுக் கொலை செய்த வழக்கு இன்று (26) நீர்கொழும்பு பிரதான நீதிவான ரவீந்திர ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நாயை கொலை செய்த சந்தேக நபரான ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் கிளமன்ட் பெர்னாண்டோ என்பவருக்கு வழங்கப்பட்ட பிணை இரத்து செய்யப்பட்டு எதிர்வரும் 29ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக சம்பவம் நடைபெற்ற அன்று கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.

Related posts

மிலேனியம் ஒப்பந்தத்தை எதிர்த்து தேரர் உண்ணாவிரதம்

G. Pragas

எதிரிகளின் அச்சுறுத்தல்களை முறியடிக்க ஈரான் பலமாக வேண்டும்!

Tharani

சிறுமி துஷ்பிரயோகம்; பெரமுன உறுப்பினர் உட்பட ஐவர் கைது!

G. Pragas