சினிமாசெய்திகள்

நாய்க்கும் இளைஞனுக்கும் இடையிலான பிணைப்பு – ‘777 சார்லி’ வெளியாகியது ட்ரெய்லர்

கிரண்ராஜ் இயக்கத்தில் ஒரு நாயை மையமாக வைத்து கன்னடத்தில் உருவாகியிருக்கும் படம் 777 சார்லி படத்தின் ட்ரெய்லர் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ர்த்திக் சுப்புராஜ் உம் தெலுங்கி வெளியீட்டு உரிமையை நடிகர் நானியும் மலையாள உரிமையை நடிகர் மற்றும் இயக்குநருமான பிரித்விராஜ் வாங்கியுள்ளார்.

இந்தத் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

இதில் ராக்‌ஷித் ஷெட்டி, சங்கீதா ஸ்ரீங்கிரி, ராஜ் ஷெட்டி, டானிஷ் சைட், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கியமாக பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஜூன் 10 வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புக்கள் எகிறியுள்ளன.

இந்தநிலையில் தமிழில் ‘777 சார்லி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதில் நாய்க்கும் ஒரு இளைஞனுக்கும் இடையிலான பிணைப்பு வெளிப்படுத்தப்படுகிறது.

https://youtu.be/S_7XzVBKOv8

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051