in ,

நாரஹேன்பிட்டியில் தடுப்பூசியால் குழப்பம்!

கொழும்பு – நாரஹேன்பிட்டியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அருகில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் இடத்தில் இன்று (24) காலை அமைதியின்மை ஏற்பட்டது.

கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக பெருமளவானோர் ஒன்றுதிரண்டிருந்தனர்.

எனினும், குறிப்பிட்ட அளவான தடுப்பூசிகள் மாத்திரமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு அமைதியின்மை நிலவியது.

அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.

இதேவேளை கொழும்பில் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நெருக்கடியை சந்திப்பதாக தெரியவருகிறது.

இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் பதவிக்கு சீலரத்ன தேரரால் வேட்புமனு!

இனியும் இலங்கை நீதிக்காக செயற்படுமென நம்ப முடியாது – அதிருப்தியில் ம.உ. கண்காணிப்பகம்!