இந்திய செய்திகள் சினிமா செய்திகள்

“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு இன்றுடன் அகவை 46

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனான விஜய்க்கு இன்று(22) 46ஆவது பிறந்தநாள். உலகம் முழுவதும் உள்ள விஜயின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இவரது பிறந்தநாளை சிறப்பூட்டி வருகின்றனர்.

நாளைய தீர்ப்பு முதல் மாஸ்டர் வரை 25 ஆண்டுகள் நிச்சயம் நீண்ட கால அளவுதான். ஆனால் பல எதிர்பார்ப்புகளையும், கணிப்புகளையும் தாண்டி, அதிகளவு ரசிகர்கள் உள்ள நடிகர்களில் ஒருவராக விஜய் மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

தனது 46ஆவது பிறந்தநாளை இன்று(22) கொண்டாடும் நடிகர் விஜயை வாழ்த்தி அவரது எண்ணற்ற ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். அதிலும் டுவிட்டர் போன்ற சமூக ஊடகத்தில் அவரது பிறந்தநாள் தொடர்பான பதிவுகள் சாதனை படைத்துள்ளன.

தமிழ் திரையுலகில், வணிகம் மற்றும் ரசிகர்களின் ஆதரவு ஆகிய அளவுகோல்களை கொண்டு எல்லா கால கட்டங்களிலும் இரண்டு கதாநாயகர்கள் முன்னணி கதாநாயகர்களாக கருதப்படுவர்.

தியாகராஜ பாகவதர்-பி.யூ. சின்னப்பா, எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல் வரிசையில் வந்தவர்கள்தான் விஜய் மற்றும் அஜித்.

2000களில் தொடங்கி, 2010-20 வரையிலான தசாப்தம் என இந்த இரு நடிகர்களின் திரைப்படங்களின் வணிகம், இவர்களின் திரைப்படம் வெளியாகும்போது மற்ற சிறு படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என்ற பேச்சு, எல்லாவற்றுக்கும் மேலாக இவர்களின் ரசிகர்களுக்கு இடையே சமூக ஊடகங்களில் நடக்கும் மோதல்கள் ஆகியவை இவர்களுக்கு சூப்பர்ஸ்டார் என்ற பிம்பத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்
#HBDTHALAPATHYVijay

அக் காலகட்டத்தில் வெளிவந்த விஜய் திரைப்படங்களில் மிக சிலவற்றை தவிர பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் காதல் சார்ந்த படங்களாகவே அமைந்தன. குஷி, மின்சார கண்ணா, பிரண்ட்ஸ், ஷாஜஹான் போன்ற வெற்றி படங்களும் இதற்கு உதாரணங்கள்.

ஆனால், 2003க்கு பிறகு நிலைமை முற்றிலும் மாறியது. சண்டை காட்சிகள், மாஸ் ஹீரோக்களுக்கு என எழுதப்படும் பிரத்தியேக வசனங்கள், mass hero entry என கூறப்படும் படத்தில் ஹீரோ தோன்றும் ஆரவாரமான முதல் காட்சி ஆகியவை வழக்கமான விஜய் திரைப்படங்களில் இருந்து மாறுபட தொடங்கியது.

2010க்கு பிறகு விஜய்யின் திரைப்படங்களில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் இடம்பெறத் தொடங்க, அது வேறு சில எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. தலைவா திரைப்படத்தில் தொடங்கி அதற்கு பிறகு வெளிவந்த அவரின் பல படங்கள் சில பிரச்சினைகளையும், எதிர்வினைகளையும் சந்திக்க வேண்டியதாயிற்று.

திரையுலகில் விஜய் கடந்து வந்த பாதை குறித்தும், தற்போதைய காலகட்டத்தில் அவரின் திரைப்படங்கள் மற்றும் திரைப்பட விழாக்களில் அவரின் பேச்சுக்களுக்கு இருக்கும் வரவேற்பே அவரின் வளர்ச்சியை பிறை சூடி நிற்கின்றது எனலாம்.

Related posts

பண்டாரவளைவிபத்து; ஒருவர் காயம்

reka sivalingam

கோத்தா மீது சர்வதேச அழுத்தங்களை பிரயோகிப்போம்

கதிர்

கொவிட் -19 பரவலின் காரணமாக நிவாரணங்கள்

கதிர்