செய்திகள் யாழ்ப்பாணம்

நாளை இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்டு நாளை (23) போராட்டம் நடத்தப்போவதாக மீனவர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

யாழில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மீனவர் அமைப்பு,

சீன பிரதமர் தமிழகத்திற்கு வருவதற்கு முன்னதாக, இந்திய கடற்படை பாக்கு நீரிணையில் சரமாரியான கைதுகளை மேற்கொண்டது. இந்தியாவிற்குள் ஊடுருவலாமென்ற சந்தேகத்தில், கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சுமார் 18 யாழ்ப்பாணம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு தமிழகத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதனை கண்டித்தும் அவர்களை உடன் விடுவிக்க வலியுறுத்தியும் நாளை யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக மீனவர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

Related posts

வடகீழ் பருவ பெயர்ச்சியை எதிர்கொள்வது குறித்து கலந்துரையாடல்

G. Pragas

பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் சஜித் போஸ்டர்கள்

G. Pragas

இ.போ.ச ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது

G. Pragas

Leave a Comment