செய்திகள் பிரதான செய்தி

நாளை எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நாளை (11) நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 53,384 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதற்காக 17 தேர்தல் தொகுதிகளில், 47 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட 5 அரசியல் கட்சிகளில் இருந்து 155 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், அவர்களில் 28 பேர் எல்பிட்டிய பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

வாக்கெண்ணும் பணிகள் வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன், எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தின் ஊடாக இறுதி முடிவு வௌியிடப்படவுள்ளது.

Related posts

சஜித்தின் புதிய கூட்டணி செயலாளராக பண்டார

Tharani

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் பலி!

G. Pragas

நபர் ஒருவர் மீது கத்திக் குத்து; ஒருவர் கைது!

கதிர்