செய்திகள்

நாளை விசேட அமைச்சரவை கூட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இறுதி அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நாளை (10) இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செவ்வாய்க்கிழமைகளிலேயே அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறுவது வழமை. எனினும், அன்று பூரணை தினம் என்பதால் நாளைய தினம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் இறுதி அமைச்சரவைக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச திணைக்களத்தில் சுனாமி நிகழ்வு

G. Pragas

சரவணன் நடிக்கும் படத்தின் பெயர் வெளியானது

Bavan

முன்னாள் சுவிஸ் தூதுவர் தலைமையிலான குழு இலங்கைக்கு வருகை

reka sivalingam

Leave a Comment