செய்திகள்மன்னார்

நினைவு தூபி இடிப்பு; முடங்கியது மன்னார்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதன்படி மன்னார் மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்களும் ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.

தனியார் போக்குவரத்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டது. மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்லவில்லை. மன்னார் நகரில் உள்ள பொதுச் சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282