செய்திகள்

அறிவியல் அறிவைப் பயன்படுத்தி நாட்டை முன்னேற்றுவேன்

இலங்கையை தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நாடாக மாற்றுவதற்காக நிபுணத்துவம் வாய்ந்த அறிவியல் அறிவினை தமது அமைச்சின் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதாக தொழில்நுட்ப புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். 

இன்று (03) தமது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற போது அவர் இதனை தெரிவித்திருந்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 

தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துடன் கட்டியெழுப்படும் பொருளாதார அபிவிருத்திக்காக இலாப முறைக்கு மாற்றாக உயர் கல்விக்கு, உயர் தொழிநுட்பத்திற்கு முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். 

தொழிநுட்ப அபிவிருத்தியை இலக்காக கொண்ட முதலீடுகள், எதிர்கால பொருளாதார அபிவிருத்திக்கு வித்திடுவதாக சர்வதேச புகழ்பெற்ற எமது நிபுணர்கள் எம்மை அனைத்து சந்தர்ப்பங்களிலும் வழிநடத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கடத்தப்பட்ட தூதரக ஊழியர் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்பட்டார்

G. Pragas

கருப்பின நபர பாெலிஸாரால் கொலை! அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்…!

Tharani

எதிர்க்கட்சிக்கு தாவிய ஆளுங்கட்சி எம்பி

கதிர்