கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

நிர்மானத் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் திறந்து வைப்பு!

கிழக்கு மாகாணத்திற்கான நிர்மானத் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் மட்டக்களப்பு – திராய்மடுவில் கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் வீரசேகரவால் நேற்று (01) திறந்து வைக்கப்பட்டது

இதன்போது கமநல அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் கே.ஜெகநாத் கருத்து தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் நிர்மாணங்களின் மூலப் பொருட்களான கல், மண், சீமெந்து, கொங்ரீட் போன்றவற்றின் தரம் மற்றும் விவசாய நிலம் உட்பட ஏனைய நிலங்களின் மணலினையும் ஆய்வு செய்து அறிக்கையிடும் நிர்மான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடமாக இந்த ஆய்வுகூடம் அமைகின்றது.

இக்கட்டிடமானது இலங்கையில் அமைந்துள்ள தரக்கட்டுப்பாட்டு
ஆய்வுக் கூடங்களில் மொனராகலை, வவுனியா ஆகிய பிரதேசங்களுக்கு மேலதிகமாக கிழக்குப் பிராந்தியத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்காக மட்டக்களப்பில் அமையப்பெற்றுள்ளது” – என்றார். (150)

Related posts

சிறிதரனிடம் பொலிஸ் விசாரணை!

G. Pragas

பயங்கரவாத பட்டியலில் தொடர்ந்தும் புலிகள்

reka sivalingam

மாலைதீவைச் சென்றடைந்தார் பிரதமர்

admin