செய்திகள்

நிறுத்தியிருந்த லொறியில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மித்தெனிய 8 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (01) அதிகாலை 3.20 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வாக்களிப்பு நேரம் நீடிப்பு குறித்து ஆலோசனை!

G. Pragas

குணமடைந்தோருக்கு இப்போதும் தொற்றுள்ளது!

G. Pragas

புலிகள் அழிந்த நாள்! எனது வாழ்க்கையின் முக்கிய நாள்! – முரளி

G. Pragas