செய்திகள் பிந்திய செய்திகள் பிரதான செய்தி

நிறைவேற்று அதிகாரத்தில் கை வைக்க அவசியமில்லை- வேலு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு குறுக்கு வழி அரசியல் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு ஒருபோதும் இடமளியோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இன்று (01) தெரிவித்தார்.

இது குறித்து மேலும்,

இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு இன்னும் உரிய வகையில் அதிகாரங்கள் பகிரப்படவில்லை. கடந்த காலங்களில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. நல்லாட்சியின் கீழ் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை இருந்தாலும், உரிமைகளை முழுமையாக அனுபவிக்ககூடிய சூழ்நிலை இன்னமும் உருவாகவில்லை.

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை என்பது போல், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையானது ஏதேனுமொரு வழியில் பாதுகாப்பு கவசமாக இருந்து வருகிறது. எனவே, அந்த முறைமையை நாம் பாதுகாக்க வேண்டும்.

குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலின் போதே முழு இலங்கையும் ஒரு தேர்தல் தொகுதியாக மாறுகிறது. அது மட்டுமல்ல சிறுபான்மையின மக்களின் வாக்கு வங்கியும் தீர்மானிக்கும் சக்தியாக மாறுகின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தான் கோரிக்கைகளை முன்வைத்து, அவற்றை வென்றெடுப்பதற்கான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கும், பேரம் பேசுவதற்கும் களம் கிடைக்கின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறையில் இருப்பதாலேயே சிறுபான்மையின மக்கள் மீதும் கட்டாயம் கவனம் செலுத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்க தலைவர்கள் முற்படுகின்றனர். இவ்வாறானதொரு பின்புலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமானால் சிறுபான்மையின மக்கள் பேரம் பேசும் சக்தியை இழப்பதுடன், அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்படும் சூழ்நிலையும் உருவாகும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்த சரத்துகள் அரசியலமைப்பின் 19-வது திருத்தச் சட்டத்தின் ஊடாக நீக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலும் அதில் கை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. என்றார் அவர்.

Related posts

மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

reka sivalingam

இருவரை தாக்கிய ஒருவர் கைது!

G. Pragas

கிரவல் கொண்டு செல்லப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கதிர்