செய்திகள்பிரதான செய்தி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க தயார்– ஜனாதிபதி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி 19 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயார் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு வாரகாலத்துக்கு மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய பிரதமரை நியமிக்கப்பட்டு புதிய அரசு ஸ்தாபிக்கப்படும்.

19ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தி நாடாளுமன்றுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

நாடு ஸ்திரத்தன்மை அடைந்தவுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையும் ஒழிக்கப்படும் –என்றார்.

மேலும் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை நான் கண்டிக்கிறேன்.

ரபட்சமற்ற அதற்குரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கிறேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,940