செய்திகள் பிரதான செய்தி

சிஐடி நிஷாந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறியமை குறித்து விசாரணை!

குற்றப்புலனாய்வு பிரிவின் (சிஜடி) பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா நாட்டை விட்டு அனுமதியின்றி வெளியேறியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கான உத்தரவை பொலிஸ் தலைமையகம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு பிறப்பித்துள்ளது.

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், நிஷாந்த டி சில்வா தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டு நேற்று (24) வெளியேறியிருந்தார்.

மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் நேற்று (24) பிற்பகல் 12.50 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து  சுவிட்சர்லாந்து நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலனாய்வு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நிஷாந்த டி சில்வா விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தார்

Related posts

இலங்கையில் கொரோனா 80 ஆகியது!

Tharani

அத்தியாவசிய பொருட்கள் யாழில் தாராளமாக உண்டு!

reka sivalingam

35 கிலோ கஞ்சா வடமராட்சியில் மீட்பு!

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.