செய்திகள் பிந்திய செய்திகள்

நீதிமன்றில் இருந்து தப்பிய கைதி மீது துப்பாக்கி சூடு

கெக்கிராவ நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற சந்தேகநபர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டினால் சந்தேகநபரின் இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

41 வயதான கலேவெல பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியெனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர் 2017 இல் சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்ற ஒருவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கல்கிரியாகம பொலிஸாரினால் நேற்று (11) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது நீதிமன்ற கட்டடத்தின் சுவரொன்றில் ஏறி தப்பிச்செல்ல முயன்றதையடுத்து பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஈரான் நாட்டு படைகளால் தவறுதலாக சுடப்பட்டது: அமெரிக்கா அறிவிப்பு

Tharani

எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட மாட்டேன்! – சஜித்

G. Pragas

அவுஸ்திரேலிய காட்டுத்தீ: 50 கோடி விலங்குகள் பலி!

Bavan