செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

நீதிமன்றுக்குள் தற்கொலை முயற்சி

யாழ்ப்பாணம் – நீதிவான் நீதிமன்ற மறியல் கூடத்திற்குள் சந்தேகநபா் ஒருவா் பிளேட்டினால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் ஒன்று இன்று (12) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபருக்கு எதிராக ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு பொலிஸாரால் முன்வைக்கப்பட்டுள்ளது. 2.400 கிராம் ஹெரோயின் அவரது உடமையிலிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இதனால் சந்தேகநபர் கடந்த ஜூலை 5ம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போது சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்து நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

இந்நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் சந்தேகநபர் நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டார். இதன்போதே தான் வைத்திருந்த பிளேட்டால் சந்தேகநபர் தனது கழுத்தை கீறி காயத்தை ஏற்படுத்தினார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல சிறைச்சாலை வாகனம் வர அரை மணிநேரம் தாமதமானது. அதனால் சந்தேகநபரின் தாயார் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்குள் பெரும் சத்தமிட்டு குரல் எழுப்பினார். எனினும் பொலிஸார் அவரை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே அழைத்துச் சென்று நீதிமன்றில் அமைதியை ஏற்படுத்தினர்.

இதேநேரம், சந்தேகநபரை தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கும் நோக்குடன் ஹெரோயினை அவரது உடமைக்குள் திணித்து சோடிப்பு வழக்கைத் தாக்கல் செய்தனர் என்று சந்தேகநபரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Related posts

சிற்பக் கற்கை நெறி சான்றிதழ் வழங்கலும் கண்காட்சி ஆரம்பமும்

admin

இலஞ்சம் பெற்ற இலஞ்ச பிரிவு பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் பணி நீக்கம்

G. Pragas

காரைநகரில் குண்டுகள் மீட்பு

admin

Leave a Comment