செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

நீதி கோரிய விழிப்புணர்வு பயணம் இறுதி நாளை எட்டியது

யாழ் ஊடக அமையத்தால் முன்னெடுக்கப்பட்டுவந்த கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் விழிப்புணர்வு பயணம் இறுதி நாளை எட்டியுள்ளது. இதன் இறுதிநாள் பயணம் இன்று (13) யாழ் நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த நவம்பவர் 2ம் திகதி ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைத்தவர்களை தண்டனையிலிருந்து விடுவிப்பதை முடிவுக்குக் கொண்டுவரும் சர்வதேச தினத்தினை முன்னிட்டு குறித்த விழிப்புணர்வு பேரணி ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டன.

இவ் வழிப்புணர்வு பயணத்தின் போது தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சம்பியனாகியது ஆவரங்கால் இந்து இளைஞர் அணி !!

G. Pragas

யாழில் இரு கிளைமோர் குண்டுகள் மீட்பு!

G. Pragas

யாழில் சிக்கிய பிரமாண்ட சுறா

கதிர்

Leave a Comment