செய்திகள் பிந்திய செய்திகள் பிரதான செய்தி வவுனியா

நீதி கோரி வவுனியாவில் மாபெரும் போராட்டப் பேரணி!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி, அவர்களுக்காக நீதியைக் கோரி வடக்கு, கிழக்கில் கடந்த 922 நாட்களாகத் தொடர்ச்சியான முறையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (30) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் இரண்டு மாபெரும் போராட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இன்படி வடக்கு மக்கள் தமது உறவுகளுக்கு நீதி கோரி காலை 10 மணிக்கு வவுனியா – பன்றிகொய்தகுளம் பகுதியில் இருந்து இறுதிப் போரின் போது தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடி வரை பேரணியாக சென்று அங்கு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போதும் பெருமளவு உறவுகள் கலந்து கொண்டனர். அரசியல்வாதிகளும், மத குருக்களும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, பேரணி நகர்ந்து கொண்டிருந்த போது தந்தை ஒருவர் மயக்கமுற்றிருந்தார்.

மேலும், “ஏமாற்றாதே! ஏமாற்றாதே, வேண்டும்! வேண்டும்! நீதி வேண்டும்!, சர்வதேசமே பதில் சொல்!, எங்கே? எங்கே? எமது உறவுகள் எங்கே?” போன்ற கோசங்களும் எழுப்பப்பட்டன. இறுதியில் பாதிக்கப்பட்ட உறவுகள் தமது நிலைப்பாட்டை வலியுறுத்தும் அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்ட பின்னர் போராட்டம் முடிவுறுத்தப்பட்டது.

இதன்போது, 922 நாட்களாக நடந்து வரும் போராட்டங்களில் கலந்து கொண்டு நோய்வாய்ப்பட்டு இறந்து போன 53 பேர் பற்றிய நூல் தொடர்பிலும் தகவல் வெளிப்படுத்தப்பட்டது

Related posts

மின்சாரம் தாக்கி இரு மாடுகள் பலி!

G. Pragas

புனித ரமழான் மாதம் நாளை ஆரம்பம்

reka sivalingam

சர்வதேச தாய் மொழி தின வைபவம்

Tharani