in , ,

நீராவிப்பிட்டியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!

முல்லைத்தீவு – நீராவிப்பிட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தகராறு காரணமாகவே கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் நீராவிப்பிட்டி பகுதியை சேர்ந்த 39 வயதுடைய முகமட் றஜாஜ் என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு கத்திக் குத்தில் முடிந்தது – இருவர் காயம்!

‘சின்னக்கலைவாணர்’ விவேக் மரணம்!