செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

நீர்வேலி மோதலில் படுகாயமடைந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் நடந்த மோதல் சம்பவத்தில், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த செல்வநாயகம் ஜெயசிறி என்பவரே இன்று (05) காலை உயிரிழந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருநபர்களுக்கு இடையில் எற்பட்ட முரண்பாடு, கைகலப்பாக மாறியதில், ஒருவரை ஏனையோர் கடுமையாக தாக்கினர்.

இதில் படுகாயமடைந்தவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அருகில் இருந்த ஏனையவர்கள் அனுமதித்துள்ளனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், உயிரிழந்த நபரை தாக்கியவரை கைது செய்துள்ளனர்.

Related posts

இந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா!

Bavan

ரஜினின் மருமகனின் பாஸ்போர்ட்டைக் காணோம்

G. Pragas

கொரோனாவால் இலாபமீட்டும் வர்த்தகர்கள்

கதிர்