in ,

நீளம் பாய்தலில் சாரங்கி தேசிய சாதனை

துருக்கியின் இஸ்தன்புல் நகரில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான நீளம் பாய்தலில் 6.44 மீற்றர் தூரம் பாய்ந்ததன் மூலம் சாரங்கி சில்வா, புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார்.

சாரங்கியின் இந்தத் தூரப் பெறுதியானது டோக்கியோ ஒலிம்பிக் பங்குபற்றுவதற்கான வாயிலை நெருங்க வைத்துள்ளது.

துருக்கியில் 6.44 மீற்றர் தூரம் பாய்ந்த சாரங்கி, 6 வருடங்கள் நீடித்த தேசிய சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிலைநாட்டினார்.

கொழும்பில் 2015 இல் நடைபெற்ற தேசிய மெய்வல்லுநர் போட்டியில் என்.சி.டி. ப்ரியதர்ஷனியினால் நிலைநாட்டப்பட்ட 6.33 மீற்றர் என்ற சாதனையையே சாரங்கி சில்வா முறியடித்தார்.

சாரங்கி சில்வாவும் நீளம் பாய்தல் வீரர் ஷ்ரேஷான் தனஞ்சயவும் தற்போது துருக்கியில் விசேட பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதற்கு முன்னர் கத்தாரில் பயிற்சி பெற்று வந்த இவர்கள் இருவரும் துருக்கிக்கு சென்று பயிற்சியில் ஈடுபடுவதால் அங்கு நடைபெறும் போட்டியில் அவர்களுக்கு பங்குபற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

காட்டு யானை தாக்கி ஒருவர் மரணம்!

மேலும் 48 பேர் பலி!