செய்திகள் பிரதான செய்தி

நுகர்வோருக்கு நன்மையை பெற்றுக் கொடுக்காமல் அரசு உள்ளது – சஜித் குற்றச்சாட்டு

அரசாங்கம் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை குறைவடைந்துள்ள போதிலும் அதன் நன்மைகளை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்காமல் இருப்பதாக முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய அரசாங்கத்திற்கு சிறந்த நிதி முகாமைத்துவம் ஒன்று இல்லை. உரிய நேரத்தில் சம்பளங்களை வழங்க முடியாது. கல்வித்துறையில் நன்மைகளை வழங்க முடியாது. ஆகவே இவ்வாறான குறைப்பாடுகளை மறைக்கவே அரசாங்கம் மசகு எண்ணையின் விலையில் மாற்றம் ஏற்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

Tharani

நிதானமாக நின்று ஆடிய கோஹ்லி; இந்தியாவிற்கு வெற்றி

G. Pragas

இந்த ஆண்டில் மலையக மக்களுக்கு வரப்பிரசாதங்கள் கிட்டும் – ஆறுமுகம்

G. Pragas