செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தி

நுரைச்சோலையில் பழுது; அதிகரிக்கிறது மின்வெட்டு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3ஆவது அனல்மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதனை அடுத்து நாடளாவிய ரீதியில் எதிர்வரும் நாள்களில் பலமணிநேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது எனப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலையின் 900 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்தி ஆலையின் அலகு ஒன்று பழுதடைந்துள்ளது.

மற்றொரு மின்னுற்பத்தி ஆலையில் 300 மெகாவாட் மின்சாரமே மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.

இதனால் மின்வெட்டு நேரத்தில் அதிகரிப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளது.

எனவே மின்வெட்டு நேரம் தொடர்பான புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282