in ,

நுவரெலியா மாவட்டத்துக்கான தடுப்பூசிகள் – ஜுன் 11 முதல் ஏற்றப்படும்

நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் எதிர்வரும் (11) ஆம் திகதி கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.

கொரோனா தடுப்பு தொடர்பான மத்திய மாகாண செயலணிக் கூட்டம், மாகாண ஆளுனர் லலித் யூ கமகே தலைமையில் ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், மத்திய மாகாணத்தில் வாழும் தோட்ட தொழிலாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருகளுக்கும் கொரோனா தடுபூசி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தடுப்பூசி பணியை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது என இ.தொ.கா. தெரிவித்துள்ளது.

இதன்படி முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்திற்கு 50 ஆயிரம் தடுபூசிகளும், மாத்தளை மாவட்டத்திற்கு 25ஆயிரம் தடுபூசிகளுமாக 75 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் 12 பொது சுகாதார காரியாலய பிரிவில் முதல் ஆறு பொது சுகாதார பிரிவுகளில் கொரோனா தடுப்பூசிகளை முதற்கட்டமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்புக்குள் உட்பிரவேசிக்கும் வாகனங்கள் வீழ்ச்சி

நாட்டை தலைகீழாக மாற்றிய புத்தாண்டு கொத்தணி