செய்திகள் பிரதான செய்தி

வசந்தகால கொண்டாட்டம் தொடர்பில் ஆய்வு

நுவரெலியாவில் வருடாந்தம் ஏப்ரல் மாதம் நடைபெறும் வசந்தகால கொண்டாட்டத்தை இம்முறை ஆகஸ்ட் மாதத்தில் அல்லது அதற்கு பின்னரான காலப்பகுதியில் நடத்துவது தொடர்பில் பரீசிலிக்கப்பட்டு வருகிறது.

2020 ஆம் ஆண்டுக்குரிய வசந்தகால நிகழ்வுகளை நடத்துவதற்கு 2019 டிசம்பர் மாதம் முதலே மாநகரசபை தயாராகியது. . எனினும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு அதனை தற்காலிகமாக ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது என நுவரெலியா மாநகரசபை மேயர் சந்தன லால் கருணாதிலக்க தெரிவித்தார்.

நுவரெலியா நகரில் பெரும் எண்ணிக்கையிலான ஹோட்டல்கள் உண்டு. இவற்றில் பணியாற்றுவோரும் உரிமையாளர்களும் சிறு வியாபாரிகளும் தற்போதைய சூழ்நிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

Related posts

புலிகளின் ஆயுதம் தேடி கோம்பாவிலில் அகழ்வு

G. Pragas

தாெழில் பிணக்கை தீர்க்க மா.உ.தொ. ஆணையாளரை தொடர்பு கொள்க!

Tharani

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்

Tharani