கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

நெஞ்சோடு துப்பாக்கியை அணைத்தபடி போராளியின் உடல் எச்சம்

கிளிநொச்சி – முகமாலையில் முன்னரங்கு பதுங்குழி ஒன்றில் இருந்து விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கியுடன் உடல் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் இன்று (22) உடல் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில், விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நெஞ்சோடு துப்பாக்கியை அணைத்தவாறு குறித்த எச்சங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் நிறுவன பணியாளர்களால் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வருகிறது 5-ஜி நொக்கியா 8.2

G. Pragas

மாணவிகளுக்கு பாலியல் அச்சுறுத்தல்; 7 இளைஞர்கள் கைது!

reka sivalingam

7ம் திகதி மூடப்படவுள்ள வீதி!

Tharani