செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

நெல்லியடிப் பொலிஸார் கைது செய்த குடும்பஸ்தர் மரணம்!

யாழ்ப்பாணம் – நெல்லியடியில் பொலிஸாரால் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

இந்த சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த ஜே.ரூபன் (வயது – 40) என்பவரே நேற்று (10) உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் தாக்கியதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குடும்ப வன்முறை தொடர்பில் குடும்பத் தலைவருக்கு எதிராக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக விசாரணைக்காக அழைத்தபோதும், அவர் பொலிஸ் நிலையத்துக்கு செல்லாமல் தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில் அவரது வீட்டுக்கு அருகிலுள்ள காணியில் நின்றிருந்த போது நேற்று அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தலைவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட வேளை, தான் அலரி விதை உட்கொண்டதாகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த நிலையில் மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அவரை வைத்தியசாலையில் அனுமதித்தபோது உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் உடல் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனை இன்னும் இடம்பெறாதமையினால் அவரது உயிரிழப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிஐடியிடம் ஜேவிபி விடுத்த கோரிக்கை!

Tharani

தபால்மூல வாக்காளர்களுக்கு விசேட அறிவிப்பு

reka sivalingam

மக்களுடன் அங்கஜன் சந்திப்பு

Tharani