செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

நெல்லியடி பகுதியில் கஞ்சாவுடன் கார்; நால்வர் கைது!

யாழ்ப்பாணம் – நெல்லியடி நகர்புறப் பகுதியில் இன்று (25) காலை 9 மணியளவில் கார் ஒன்றில் இருந்து இரண்டு கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

நெல்லியடி புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நெல்லியடி பொலிஸாருடன் இணைந்து இந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் இருந்து கொடிகாமம் நோக்கி செல்லும் போது நெல்லியடி நகர் பகுதியில் வைத்து கார் ஒன்றை மடக்கிப் பிடித்து சோதனையிட்ட போதே கஞ்சா மீட்கப்பட்டது.

திருகோணமலையைச் சேர்ந்த நால்வர் (WP, KX – 4838) இலக்கமுடைய காரில் பயணித்துள்ளனர். 25, 22, 19, 19 வயது மதிக்கத்தக்க நால்வரும் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மன்னாரில் இ.போ.ச ஊழியர்கள் வேலை நிறுத்தம்

G. Pragas

சிவகுருநாதர் வெற்றிக் கிண்ணத் தொடர் ஆரம்பம்

G. Pragas

நாமல் எம்பி திருமண பந்தத்தில் இணைந்தார்

G. Pragas

Leave a Comment