செய்திகள் பிந்திய செய்திகள்

நேபாளத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நேபாளத்திலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

13 ஆவது தெற்காசிய விளையாட்டுப்போட்டி நேபாளத்தில் நடைபெறவுள்ளது. இதில் இம்முறை நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள ஏழு பரீட்சாத்திகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த ஏழு பரீட்சாத்திகளும் நேபாளத்தில் வைத்து பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நேபாளத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்திலேயே, இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளது.

குறித்த பரீட்சையானது இலங்கையில் பின்பற்றப்படும் அதே ஒழுங்குவிதிகளுக்கு அமைவாகவே நேபாளத்திலும் நடத்தப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

யாழ்ப்பாணத்தில் சுமூகமாக தேர்தல் இடம்பெறும் – அரச அதிபர்

G. Pragas

இணையவழி கருத்தரங்கிற்கு அழைப்பு!

G. Pragas

வவுனியாவில் வாள் வெட்டு – அறுவர் காயம்!

G. Pragas