செய்திகள்

நேர்முகத்தேர்வு!

16 வயதுக்கு மேற்பட்ட இளையோருக்கு தொழில் வாய்ப்புக்கான நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது.
யாழ். மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் பல்வேறுபட்ட வேலைக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
இதனை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த வாய்ப்பை இளையோருக்கு வழங்குவதாக யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

கணக்காளர், நிதி நிறுவன உத்தியோகத்தர்கள், ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள், தாதிகள், கட்டுமாணப் பணியாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மேசன், தச்சுத் தொழிலாளி, பிளம்பர், பெயின்ரர், காசாளர், சேவை உதவியாளர், விற்பனை மேலாளர், விற்பனை முகவர், பாதுகாப்பு சேவை பணியாளர்கள், உற்பத்தி தொழிற்சாலைப் பணியாளர்கள், காப்புறுதிப் பணியாளர்கள் ஆகிய வெற்றிடங்களுக்கான நேர்முகத் தேர்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

தங்களுக்கான நேர்முகத்தேர்வுத் தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை யாழ்.மாவட்டத் தொழில் நிலையத்துக்கு நேரடியாகச் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு 0212219359 என்ற மாவட்டத் தொழில் நிலைய தொலைபேசியூடாக தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்டச் செயலர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051