செய்திகள் பிரதான செய்தி வவுனியா

நேற்று பிறந்தநாள் – இன்று பலியான சிறுவன்; வவுனியாவில் சோகம்!

வவுனியா – கற்குளத்தில் அமைந்துள்ள கற்குவாரியில் உள்ள குழியில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்.

கற்குவாரிப் பகுதிக்கு சென்ற குறித்த சிறுவன், அங்குள்ள பாதுகவலரிடம் தண்ணீர் போத்தல் கேட்டுள்ளான். பின்னர் கல் அகழ்வு இடம்பெறும் இடத்திற்கு சென்று தவறுதலாக கல் அகழ்வுக்காக வெட்டப்பட்ட நீர் நிறைந்த குழியினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

தாயின்றி இரண்டு வயதிலிருத்து தந்தை மற்றும் மாமாவின் அரவணைப்பில் வாழ்ந்த சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில் தரம் 2ல் கல்வி கற்ற 8 வயதுடைய நிரோஜிதன் சிமியோன் என்ற சிறுவனே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளான்.

நேற்றையதினம் (23) இச்சிறுவனின் 8வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

Related posts

மலையக மைந்தன் யாழ் நீதிமன்ற நீதிவானாக கடமையேற்பு!

Tharani

இந்தோனேஷியாவில் இருந்து 110 பேர் நாடு திரும்பினர்

Tharani

ரவியின் மனுவை விசாரிக்க மூன்று நீதிபதிகள்

G. Pragas