சினிமா செய்திகள்

நோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த் அதிரடி!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால், தன்னுடைய பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை அதற்காக எடுத்துக்கொள்ளலாம் என தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், தன்னுடைய பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை இதற்காக மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளலாம், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தது குறித்து வேதனை அடைந்திருப்பதாகவும் மக்கள் அனைவரும் இது போன்ற விடயங்களில் மனிதாபிமானத்தோடு சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

4 தசாப்தம் கடந்து கியூபாவின் முதல் பிரதமர் நியமனம்

Tharani

புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் – விக்கி

Tharani

கொரோனா தாக்கிய பெண் தங்கியிருந்த ஹோட்டல்களில் ஆய்வு

G. Pragas