செய்திகள் பிரதான செய்தி மலையகம்

நோர்வூட் தீ விபத்தில் 7 வீடுகள் நாசமானது!

நுவரெலியா – நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்ஜஸ்ட்ரி குரூப் பிலிங்போனி தோட்டத்தில் நேற்று (16) இரவு 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 7 வீடுகள் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளதுடன் குறித்த வீடுகளில் குடியிருந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீ பற்றியதைத் தொடர்ந்து, நோர்வூட் பொலிஸார் மற்றும் ஹற்றன் – டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 3 மணித்தியாலயத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், சில வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன.

தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும், தோட்ட வைத்தியசாலையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மாத்தளை உள்ளிட்ட பகுதிகளில் நாளை நீர் வெட்டு!

reka sivalingam

இன்றைய நாள் ராசி பலன்கள் (3/3) – உங்களுக்கு எப்படி?

Bavan

“தூக்கு கயிறு கேட்டு” கதறிய சிறுவன்!

G. Pragas

Leave a Comment