செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

பகிடிவதைக்கு எதிராக வடக்கு ஆளுநர் விசேட கலந்துரையாடல்

பகிடிவதைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுப்பது தொடர்பில் விசேடக் கலந்துரையாடல் ஒன்று மேற்க்கொள்ளப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் பணிப்புரைக்கமைய யாழ் பல்கலைக்கழக அதிகாரிகள் குறித்த கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளனர்.

அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவி ஒருவர் தொலைபேசி மூலம் பகிடிவதைக்கு உற்படுத்தப்பட்டதாக, குறித்த மாணவியின் பெற்றோர் வடக்கு மாகாண ஆளுனரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பகிடிவதைக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜப்பான் பிரதமரைச் சந்தித்தார் மோடி

G. Pragas

வண்ணமயமாக்கும் முயற்சியில் கிளிநொச்சி இளைஞர்கள்

கதிர்

நாடாளுமன்றை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரமுண்டு

Tharani