செய்திகள்மலையகம்

‘பசித்தவன்’ குறும்படத்தில் நடித்த சிறுவன் பாம்பு தீண்டியதில் மரணம்!

நுவரெலியா – ஒஸ்போன் தோட்டதை சேர்ந்த, அண்மையில் வெளியான ‘பசித்தவன்’ என்ற குறும் திரைப்படத்தில் மாணவனாக நடித்த ரொபேட் தோபியா எஸ்கர் என்ற (12-வயது) சிறுவன் இன்று (11) அதிகாலை பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளான்.

அதிகாலை ஒரு மணியளவில் ஆழ்ந்த நித்திரையிலிருந்த சிறுவனின் கழுத்தில் பாம்பொன்று இருப்பதை கண்ட பெற்றோர் பாம்பை அடித்து வீசிவிட்டு மீண்டும் நித்திரைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், அதிகாலை நான்கு மணியளவில் குறித்த சிறுவன் மயக்கம் வருவது போலிருப்பதாக பெற்றோரிடம் கூறியதையடுத்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசலையில் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரேத பரிசோதனையின் போது பாம்பு தீண்டி விசமானதாலேயே சிறுவன் உயிரிழந்துள்மை தெரியவந்துள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282