in , ,

படுகொலை வழக்கில் இருந்து பிள்ளையான் உட்பட ஐவர் விடுதலை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ‘மாமனிதர்’ ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகள் வழக்கில் இருந்தும் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் இன்று (13) சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பிள்ளையானுக்கு எதிராக வழக்கை தொடரப் போவதில்லை என்று நேற்று முன் தினம் (11) சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றும்கு அறிவித்த நிலையில் இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஜோசப் பரராஜசிங்கம் 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த படுகொலை தொடர்பாக ‘தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எம்.பி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் எனும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனும் கனகநாயகம், இராணுவப் புலனாய்வு பிரிவு உத்தியோகஸ்தரான எம்.கலீல் மற்றும் முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க எனும் வினோத்‘ ஆகியோர் 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெயர் எதுவாகிலும்…! #ஆசிரியர் தலையங்கம்

வவுனியாவில் 16 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி!!