in

பட்டதாரி பயிலுநர்களுக்கு விரைவில் நியமனம்!

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. அவர்களுக்கு மாதாந்தம் 41 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்று, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட சுமார் 58 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.

கொரோனாத்தொற்று காரணமாக பட்டதாரிகளுக்கு வழங்கப்படவிருந்த தொழில் பயிற்சிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு பணிந்தது அரசு!

சட்டத்துக்கு உட்பட்டு நினைவேந்துங்கள்!