பட்­டப்­ப­க­லில் வவு­னி­யா­வில் குடும்­பஸ்தர் வெட்­டிக்­கொலை

வவு­னியா – ஆச்­சி­பு­ரம் பகு­தி­யில் நேற்று இடம்­பெற்ற வாள்­வெட்­டுத் தாக்­கு­த­லில் குடும்­பத் தலை­வர் ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார்.

அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த ரஞ்சா என்று அறி­யப்­பட்ட யோன்­சன் (வயது – 30) என்ற குடும்­பத் ­த­லை­வரே  இவ்­வாறு சாவ­டைந்­துள்­ளார்.

நேற்று மாலை அந்­தப் பகு­திக்­குச் சென்ற வன்­மு­றைக் கும்­பல் ஒன்று யோன்­சன் மீது தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளது. அவ­ரது முகம் உள்­பட உட­லில் பல இடங்­க­ளில் காயங்­கள் ஏற்­பட்­டன. அவ­ரது ஒரு கையும் துண்­டா­டப்­பட்­டது. இந்த நிலை­யில் அவர் சம்­பவ இடத்­தில் உயி­ரி­ழந்­தார்.

சம்­ப­வம் தொடர்­பில் சிதம்­ப­ர­பு­ரம் பொலி­ஸார் விசா­ர­ணை­களை நடத்தி வரு­கின்­ற­னர். சட­லம் உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னை­க­ளுக்­காக வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது.

Exit mobile version