in , ,

பணவீக்கம் காரணமாக தங்கம், வெள்ளிக்கு கேள்வி அதிகரிப்பு! எகிறுகிறது இதன் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருள்களின் கேள்வி அதிகரித்துள்ளது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 சதவீதம் உயர்வடைந்துள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 1,862.97 அமெரிக்க டொலர்களில் அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலையில் இதுவரை குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இலங்கை சந்தையில் 22 கரட் தங்க பவுணின் விலை 109,200 ரூபாவாகவும், 24 கரட் தங்க பவுணின் விலை 118,000 ரூபாவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய கடல்வழி பயண சேவை யாழில் ஆரம்பம்!

கொரோனா அதிகரிப்பு; கூடுகிறது விசேட செயலணி!