in , ,

பணிகளை தொடங்கியது யாழ் மாநகர ‘காவல்படை’

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட சுகாதார காவல்படை முதல் தடவையாக இன்று (7) தமது பணியை ஆரம்பித்துள்ளது.

யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகள், கழிவகற்றல் பொறிமுறைகள் மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக குறித்த மாநகர காவல்படை உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த காவல்படை நாளை (8) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ள நிலையில் இன்று காலை பரீட்சார்த்தமாக நல்லூர் ஆலய வீதியில் காணப்பட்ட ஓயில் அகற்றப்பட்டு, விபத்துக்களை தவிர்க்க முன்னாயத்த நடவடிக்கைகளை குறித்த காவல்படை கண்காணித்தது.

யாழின் 1000 பிசிஆர் முடிவுகள் இன்று!

சரத்குமார், ராதிகா உட்பட மூவருக்கு ஓராண்டு சிறை!