செய்திகள் பிரதான செய்தி

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட தபால் ஊழியர்கள்

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் முன்னெடுத்த பணிபுறக்கணிப்பு, இன்று (29) வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் தபால்மா அதிபரால் இது தொடர்பில் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

தபால் வாக்கு சீட்டுகள் விநியோகத்தை காரணமாக கொண்டு நேற்று (28) நள்ளிரவு முதல் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர்.

இதற்கு முன்னர் குறித்த நடவடிக்கை, கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போது அது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Related posts

20 கிலோ போதைப்பொருள் மீட்பு

reka sivalingam

சீமராஜா சிங்கம்பட்டி ஜமீனின் மறைவு; இரங்கல் தெரிவித்த சிவகார்த்திகேயன்!

Bavan

ஐசிசி தலைவர் பதவி குறித்து சிந்திக்கவில்லை – சங்கா

G. Pragas