in ,

பன்னலயில் வெடி சம்பவம்; இருவர் படுகாயம்!

குருநாகல் − இப்பாகமுவ, பன்னல பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் இடம்பெற்ற வெடி சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த வெடி சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெடிப்பொருளில் இருந்து வெடி மருந்தை எடுத்து இரும்பு குழாய்க்குள் இட்டு, அந்த இரும்பு குழாயை கிரைன்டர் ஒன்றின் ஊடாக வெட்ட முயற்சித்த போதே இந்த வெடி சம்பவம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் 22 மற்றும் 27 வயதான இருவர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா:- இன்று யாழில் 7 – நாட்டில் 650

திமுத் – தனஞ்சய அசத்தல்; சளைக்காத பங்களாதேஷ் – முதல் டெஸ்ட் சமநிலை;