செய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைதான -5 பேர் விடுதலை!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த பளை, கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின்பிரகாரம் இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2019ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

பளை மருத்துவமனையின் மருத்துவர் எஸ்.சிவரூபன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டிலேயே மேற்குறித்த ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

எனினும், அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் எந்தவொரு குற்றப்பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை. இந்தநிலையில், சுமார் இரண்டு வருடங்களின் பின்னர் அவர்கள் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994