உலகச் செய்திகள் செய்திகள் பிந்திய செய்திகள்

பயங்கரவாதி அபு கொல்லப்பட்டதை இஸ்லாமிய அரசு உறுதி செய்தது

அமெரிக்க படையினரால் இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகதின் தலைவர் அபு பகர் அல் பக்தாதி கொல்லப்பட்டதை அடுத்து புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய அரசு பயங்கரவாத அமைப்பின் தலைவர் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார்.

இதுபற்றி கூறிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் அமெரிக்க சிறப்புப்படைகள் நடத்திய தாக்குதலில் அபு பகர் அல்-பக்தாதி கொல்லப்பட்டார். சுரங்கம் ஒன்றில் சிக்கிய அவர் தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் ஒரு கோழை போல இறந்தார். டிஎன்ஏ பரிசோதனை மூலம், கொல்லப்பட்டது பக்தாதிதான் என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. உலகம் இனி பாதுகாப்பாக இருக்கும் – என்றார்.

இந்நிலையில் அபு பகர் கொல்லப்பட்டதை இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகின் டெலிகிராம் மெசஞ்சர் சேவை நேற்று (31) உறுதி செய்து அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அத்துடன் புதிய தலைவராக அபு இப்ரஹிம்‌ ஹஷெமி அல் குரேஷி பெயரிடப்பட்டுள்ளான் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

Related posts

“நீர் மேலாண்மை”

Tharani

ஊழியர் விவகாரத்தில் நடந்து கொண்ட விதம்; சுவிஸ் விமர்சனம்

G. Pragas

நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு

reka sivalingam

Leave a Comment