கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

பயங்கரவாத தாக்குதல் சந்தேக நபர்கள் 63 பேரின் மறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹித் ஜமாத் இயக்கதுடன், தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 63 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் இன்று (07) முன்னிலைப்படுத்தியபோதே அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹித் ஜமாத் தலைமையகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் 4 பெண்கள் அடங்குவதுடன், இம்மாதத்துடன் தாக்குதல் இடம்பெற்று 6 மாதங்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆறு கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

Tharani

விபத்தில் பலியான சிறுவன்!

G. Pragas

சிகை அலங்காரம் பயிற்சிகளுக்கு ஏற்பாடு

G. Pragas