ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையின் பிரதி ஒன்று ஜனாதிபதி செயலகத்தால் இன்று (23) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
நூல் வடிவிலான இந்த அறிக்கை தற்போது நாடாளுமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதனை விரும்பிய எம்பிகள் படிக்க முடியும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த அறிக்கையின் 10 உள்ளடக்கங்களை ஹரின் பெர்னாண்டோ எம்பி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.