in ,

பயிர் செய்ய முடியாத உவர் நிலப்பகுதிகளாக முல்லைத்தீவில் 836 ஹெக்ரேயர் நிலப்பரப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் 836 ஹெக்ரேயர் நிலப்பரப்பு பயிர் செய்கை மேற்கொள்ளமுடியாத உவர் நிலப்பகுதிகளாக காணப்படுகின்றன என்று மாவட்ட விவசாய திணைக்களத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு மற்றும் நந்திக் கடலை அண்டிய பகுதிகளிலும் ஏனைய பிரதேசங்களில் விளைநிலங்கள் அதிகளவில் உவர் தன்மையுடன் காணப்படுவதாகவும் இதனால் தமது விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, நந்திக்கடலை அண்டிய கரையோரப் பகுதிகளில் மழைக்காலங்களில் அதிக நீர் தேங்குதல் மற்றும் கடல் நீர் உட்புகுதலால் தமது வயல் நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கரையோரங்களில் காணப்படும் சேதமடைந்த உவர் நீர்த்தடுப்பணைகளை அமைத்துத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 836 கெக்ரேயர் நிலப்பரப்பு அதிகூடிய உவர் தன்மையான பயிர்ச் செய்கை மேற்கொள்ளமுடியாத பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என மாவட்ட விவசாய திணைக்களத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் போன்ற பகுதிகளில் அதிகளவான பகுதிகள் இவ்வாறு காணப்படுவதாகவும் விவசாயத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டம்!

நாட்டில் பால் மா தட்டுப்பாட்டுக்கு காரணம் குறித்து பந்துல விளக்கம்