கிளிநொச்சிசெய்திகள்

பரந்தன் கொலை தொடர்பில் இளைஞன் கைது!

கடந்த புதுவருட தினத்தன்று பரந்தனில் இடம்பெற்ற கொலை தொடர்பில் கிளிநொச்சி பிரதேச சபையில் சுகாதார ஊழியராகப் பணிபுரியும் இளைஞன் ஒருவர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலைச் சம்பவத்தன்று காயமடைந்தவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்ததாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபர்களின் விவரங்களை காயமடைந்தவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தும் இதுவரை பிரதான சந்தேக நபர்கள் கைதுசெய்யப்படவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.

கடந்த புதுவருட தினத்தன்று பரந்தன் சிவபுரத்தைச் சேர்ந்த குணம் கார்த்திக்(26) எனும் இளைஞன் பரந்தன் சந்தியில் குத்திக் கொலை செய்யப்பட்டதுடன் மற்றொரு இளைஞன் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051